பகிடிவதையை ஒழிக்க புதிய மொபைல் 'App' - sonakar.com

Post Top Ad

Thursday, 7 June 2018

பகிடிவதையை ஒழிக்க புதிய மொபைல் 'App'பல்கலைக்கழகங்களில் பகிடிவதை கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் புதிய மொபைல் செயலியொன்று (App) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதனைப் பார்த்தவர்கள் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு முறையிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக மானியக் குழு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாராவது குறித்த செயலி மூலம் தகவல் வழங்கும் போது மாணவரின் இருப்பிடம் கண்டறியப்படுவதுடன் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த செயலியின் வெளியீட்டு நிகழ்வு விஜேதாச ராஜபக்ச தலைமையில் நேற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment