ஹஜ் குழுவின் 'ஊழல்களை' விசாரிக்க கோரிக்கை! - sonakar.com

Post Top Ad

Sunday, 24 June 2018

ஹஜ் குழுவின் 'ஊழல்களை' விசாரிக்க கோரிக்கை!
அமைச்சர் ஹலீமின் நிர்வாகத்தின் கீழான ஹஜ் குழு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவது தொடர்பில் உடனடியாக விசாரணை நடாத்தப்பட வேணடும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது அகில இலங்கை ஹஜ் சங்கம்.


குறித்த சங்கத்தின் சார்பில் அதன் பிரதித்தலைவர் எம்.எஸ். முஹம்மத் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் அமைச்சர் ஹலீமும் அவரது சகோதரர் பாஹிமும் அதிகார துஷ்பிரயோகம் செய்து கோட்டாவைக் குறைப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஹஜ் கோட்டாவின் ஒரு பகுதி அமைச்சர் தரப்பினரால் 'பிரத்யேகமாக' சுவீகரிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment