சமூக வலைத்தளங்களை மூடும் நிலை வரும்: ஜனாதிபதி எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Friday, 1 June 2018

சமூக வலைத்தளங்களை மூடும் நிலை வரும்: ஜனாதிபதி எச்சரிக்கை!


சமூக வலைத்தளங்களால் சமூக அளவில் ஏற்பட்டிருக்கும் தவறான பாதிப்புகளைக் களையும் வகையில் சமூக வலைத்தளங்களை நிரந்தரமாக முடக்கிவிடும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


நாட்டின் பாதுகாப்பு, குடும்ப உறவுகள் சீர்குலைவு மற்றும் இனவாத நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு சமூக வலைத்தளங்கள் துணை நிற்பதாகவும் இவை தானாக நெறிப்படுத்தப்படாவிட்டால் அரசாங்கம் முழுமையாகத் தடை செய்யும் சூழ்நிலை உருவாகும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வெற்றிக்கு சமூக வலைத்தளங்கள் பாரிய பங்களிப்பை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment