ஹெலிகப்டரில் போன நேரத்தில் நானே 'ஜனாதிபதி': மஹிந்த - sonakar.com

Post Top Ad

Friday, 1 June 2018

ஹெலிகப்டரில் போன நேரத்தில் நானே 'ஜனாதிபதி': மஹிந்த2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றதும் மஹிந்த ராஜபக்ச வீடு போய் சேர்வதற்குத் தானே ஹெலிகப்டர் வழங்கியதாகவும் இது உலகில் எங்கும் நடைபெறாத ஒரு விடயம் எனவும் 2016ம் ஆண்டு தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நேற்று முன் தினம் அதனை மறுதலித்து தனது பெயரில் யாரோ வழங்கியிருக்கிறார்கள் எனவும் தனக்கு அவ்விடயம் தெரியாது எனவும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், குறித்த சந்தர்ப்பத்திலும் தானே ஜனாதிபதியெனவும் அதனால் தனக்கு யாரும் அவ்வாறு உதவி செய்ய வேண்டிய தேவையிருக்கவில்லையெனவும் பதிலளித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

கூட்டாட்சி அரசு பலவீனமடைந்து வருகின்ற அதேவேளை மைத்ரிபால சிறிசேன தான் தனிமைப்படுத்தப்படுவதாக உணர்ந்து கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment