இனி அணு ஆயுத தாக்குதல் அச்சமில்லை: ட்ரம்ப் பெருமிதம்! - sonakar.com

Post Top Ad

Wednesday 13 June 2018

இனி அணு ஆயுத தாக்குதல் அச்சமில்லை: ட்ரம்ப் பெருமிதம்!


சில வாரங்கள் முன் வரை போர் அறைகூவல்,  அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கைகள் விடுத்துக்கொண்டிருந்த வடகொரியாவும் அமெரிக்காவும் ஓரிடத்திலமர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதன் பின்னணியில் இனி அமெரிக்காவுக்கு அணு ஆயுத அச்சமில்லையெனவும் 2020 அளவில் வடகொரியா முழுமையாக அணு ஆயுதங்களைக் கைவிடும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.


70 வருடங்களாகத் தொடர்ந்து வந்த பகை, அமெரிக்காவின் எப்பாகத்தையும் அணு ஆயுதம் கொண்டு தாக்கும் வல்லமையை வடகொரியா பெற்றமை நிரூபிக்கப்பட்டதையடுத்து பேச்சுவார்த்தையில் முடிந்துள்ளது.

இந்நிலையில், தென்கொரியாவுடன் இணைந்து பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகள், பயிற்சிகளில் ஈடுபடுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் எனவும் வடகொரியா அணு ஆயுதங்களை முற்றாகக் கைவிடும் எனவும் இரு நாட்டுத் தலைவர்களின் கருத்துக்களின் பின்னணியில் நம்பப்படுகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இவ்வதிரடி நடவடிக்கைகள் உலக அரங்கில் பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment