பிறை தீர்மானம்: செயற்திறன் மிக்க வேலைத்திட்டம் அறிமுகம்: ஹலீம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 June 2018

பிறை தீர்மானம்: செயற்திறன் மிக்க வேலைத்திட்டம் அறிமுகம்: ஹலீம்!


இனி வரும் காலங்களில் பிறை தீர்மானிக்கும் விடயத்தில் புதிய தொழிநுட்பத்தைப் புகுத்தி, செயற்திறன் மிக்கதும் நம்பகத்தன்மையுடயதுமான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ஹலீம்.


நாட்டில் அண்மையில் ஏற்பட்ட தலைப்பிறை சர்ச்சை தொடர்பாக நாம் விரிவாக ஆராய்ந்தோம். குறிப்பாக தலைப்பிறை தென்பட்டதாக பொது மக்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவியது. இது தொடர்பாக ஜம்மியத்துல் உலமா, பெரியபள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் பண்பாட்டு திணைக்களம் ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனை ஆராய்ந்து எதிர்காலத்தில் சிறந்த சேவையொன்றை வழங்கும் நோக்கத்தில் பிறைக்குழுவுடன் தொடர்புடைய சகல தரப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. இங்கு தலைப்பிறை தொடர்பாக சிறந்த விளக்கங்களை தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களின் கூற்றுக்களின் அடிப்படையில் பிறை தொடர்பில் எவ்வித பிரச்சினையும் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

-Ameen M Rilan

No comments:

Post a Comment