இன்று அளுத்கம வரும் ஞானசாரவை விடுவிக்கக் கோரும் பாத யாத்திரை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 June 2018

இன்று அளுத்கம வரும் ஞானசாரவை விடுவிக்கக் கோரும் பாத யாத்திரை!


நீதிமன்ற அவமதிப்பு, சாட்சியை அச்சுறுத்தியமையின் பின்னணியில் ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ள ஞானசாரவை விடுவிக்கக் கோரி, காலியிலிருந்து ஆரம்பித்த பாத யாத்திரை இன்று இரண்டாவது நாள் அளுத்கமயை வந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது.இரண்டாவது நாளான இன்று சீனிகம விகாரையிலிருந்து புறப்பட்ட பாத யாத்திரை மாலை அளுத்கம நகரை வந்தடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஞானசாரவின் விடுதலை கோரும் 'அதிஷ்டான பாகமன'வில் இதுவரை சொற்பமானவர்களே கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment