ஜனாதிபதி தலைமையில் பௌத்த ஆலோசகர் குழு சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 June 2018

ஜனாதிபதி தலைமையில் பௌத்த ஆலோசகர் குழு சந்திப்பு


புத்தசாசன அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடுவதற்கான பௌத்த ஆலோககர் குழுவின் சந்திப்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.


முக்கிய நிகாயக்களின் தலைமைகளடங்கிய இக்குழுவினர் இலங்கையில் புத்தசாசனத்தை பாதுகாப்பதோடு அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் குறித்தும் அவ்வப்போது அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் கலாச்சார அமைச்சராக நியமிக்கப்பட்ட விஜேதாச ராஜபக்சவும் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment