இலங்கையில் நாளை நோன்புப் பெருநாள்! - sonakar.com

Post Top Ad

Friday, 15 June 2018

இலங்கையில் நாளை நோன்புப் பெருநாள்!


ஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (15) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாசபை உறுப்பினர்கள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், உலமாக்கள், பள்ளிவாசல்கள், ஷாவியாக்கள், தரீக்காக்கள் மற்றும் மேமன் சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தெளிவாக தென்பட்டதற்கிணங்க இலங்கை வாழ் முஸ்லிம்களை நாளை சனிக்கிழமை (16) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு பிறைக் குழுவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment