ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! - sonakar.com

Post Top Ad

Friday, 15 June 2018

ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!


எதிர்பார்த்தபடி பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்திருந்த ஞானசாரவுக்கு ஆறுமாத கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இலங்கை வரலாற்றில் பௌத்த துறவியொருவர் இவ்வாறு சிறைப்படுத்தப்படுவது அரிதான விடயமாதலால் இது சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

எனினும், ஏலவே நீரிழிவு மற்றும் பாதங்களில் தொழுநோயுடன் உலா வந்த ஞானசார எதிர்பார்த்தபடி தற்சமயம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறு மாத காலத்தில் நிறைவடையும் வகையில் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை என ஹோமாகம நீதிமன்றம் ஞானசாரவுக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment