2.5 கோடி பெறுமதியான போதைப்பெருளுடன் சுதாவின் சகா கைது! - sonakar.com

Post Top Ad

Friday, 15 June 2018

2.5 கோடி பெறுமதியான போதைப்பெருளுடன் சுதாவின் சகா கைது!


இலங்கையின் போதைப் பொருள் வர்த்தகத்தில் 65 வீதத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நபர் என அடையாளப்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் சகா ஒருவர் 2.5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


பிலியந்தல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இக்கைதின் போது குறித்த நபரிடமிருந்து துப்பாக்கியும் ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெலே சுதாவின் மனைவி மற்றும் தங்கையும் இவ்வாறு போதைப்பொருள் விற்பனைக் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment