இலங்கையில் சில இடங்களில் பெருநாள் தொழுகை - sonakar.com

Post Top Ad

Friday, 15 June 2018

இலங்கையில் சில இடங்களில் பெருநாள் தொழுகை


நாட்டின் சில இடங்களில் பிறை தென்பட்டதாக நேற்றிரவு நிலவிய குழப்ப சூழ்நிலையின் மத்தியில் இன்று நாட்டின் சில பகுதிகளில் பெருநாள் தொழுகை இடம்பெற்றுள்ளது.பிறை குறித்த சாட்சியங்களில் பல நம்பகத்தன்மையற்றது என கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழு, ஜம்மியத்துல் உலமா, மேமன் சங்கம் உட்பட்ட அமைப்புகள் தீர்மானித்திருந்த அதேவேளை, ஆகக்குறைந்தது மன்னாரில் 'உறுதிப்படுத்தக்கூடியதாக' இருந்ததாக தெரிவித்தும் ஒரு சில அமைப்புகள் இவ்வாறு இன்று பெருநாளைக் கொண்டாடுகின்றன.

எனினும், குழப்ப சூழ்நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சாட்சியங்கள் முரணான கருத்துக்களை வெளியிட்டிருப்பதனால் அவை நம்பகத்தன்மையற்றவை எனவும் தீர்மானித்த பிறைக்குழு இன்று நோன்பு நோற்பதென தீர்மானித்திருந்த நிலையில் இதனை ஏற்றுக்கொண்ட பெரும்பாலான மக்கள் இன்று 29வது நோன்பைத் தொடர்கின்றமையும் இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை பெருநாள் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

-இக்பால் அலி

No comments:

Post a Comment