இன்னும் அமெரிக்க பிரஜைதான்: கோத்தா! - sonakar.com

Post Top Ad

Monday, 25 June 2018

இன்னும் அமெரிக்க பிரஜைதான்: கோத்தா!


கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகத் தான் தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே தான் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிடப் போவதாக தெரிவிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.


அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட தனக்கு இரு மாதங்களே அவசியப்படும் எனவும் தெரிவிக்கின்ற அவர், வேறு சட்டச் சிக்கல்கள் எதுவுமில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ச அறிவித்ததும் தனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிக்கப் போவதாகவும் கோத்தபாய தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment