தயாசிறியை விசாரணைக்கு அழைக்கும் சி.ஐ.டி! - sonakar.com

Post Top Ad

Saturday, 9 June 2018

தயாசிறியை விசாரணைக்கு அழைக்கும் சி.ஐ.டி!


அர்ஜுன் அலோசியசின் பர்பச்சுவர் டிரசரிஸ் நிறுவனத்திடமிருந்து முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு 1 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் அவரது வாக்குமூலத்தைப் பெறப் போவதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதி மன்றில் தெரிவித்திருந்தது.


இந்நிலையில், எதிர்வரும் திங்கள் அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

சரத் பொன்சேகா தமக்கு ஒரு லட்ச ரூபா நன்கொடையாகக் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அதேவேளை சுஜீவ சேனசிங்கவுக்கு 3 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment