கோத்தா ஜனாதிபதியானால் நாட்டை விட்டு வெளியேறுவேன்: மேர்வின் - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 June 2018

கோத்தா ஜனாதிபதியானால் நாட்டை விட்டு வெளியேறுவேன்: மேர்வின்


கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் தான் நாட்டை விட்டு வெளியேறப் போவதாக தெரிவிக்கிறார் மேர்வின் சில்வா.


வெள்ளை வேன் கடத்தல்களின் பின்னணியில் கோத்தாவே இருப்பதாக குற்றப்புலனாய்வுப்பிரிவில் மேர்வின் சில்வா முறைப்பாடு மேற்கொண்டிருந்ததோடு பரவலாக இது குறித்து கருத்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவ்வாறான கடத்தல்காரர்களின் ஆட்சியின் கீழ் தான் ஒரு போதும் இருக்க முடியாது என மேர்வின் சில்வா மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment