மீண்டும் 'சர்வாதிகாரம்' தலை தூக்க இடமில்லை: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Friday, 22 June 2018

மீண்டும் 'சர்வாதிகாரம்' தலை தூக்க இடமில்லை: மைத்ரி


2015ல் தோற்கடிக்கப்பட்ட சர்வாதிகாரப் போக்கு நாட்டில் மீண்டும் தலையெடுக்க முடியாது எனவும் அதற்கு இடமளிக்கப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


சர்வாதிகார ஆட்சியாளரைத் தூக்கியெறிந்த மக்கள் தம் மீது 2015 ஜனவரி 8ம் திகதி வைத்த நம்பிக்கையை வீணடிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ள அவர் நாட்டின் மீண்டும் சர்வாதிகாரம் உருவாகாது என தெரிவிக்கிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் வாக்குறுதியுடன் ஆட்சிபீடமேறிய போதிலும் பிரதமர் ஆட்சி முறைமை மீண்டும் மஹிந்த ராஜபக்சவை ஆட்சி பீடத்தில் ஏற்றும் எனும் அச்சம் நிலவுகின்ற நிலையில் குறித்த திட்டமும் பின் போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment