கொள்ளையர்களுடன் துப்பாக்கிச் சண்டை; மூன்று பொலிசார் காயம்! - sonakar.com

Post Top Ad

Friday, 22 June 2018

கொள்ளையர்களுடன் துப்பாக்கிச் சண்டை; மூன்று பொலிசார் காயம்!


மாத்தறை நகரில் அதிகாலை வேளையில் நகைக்கடை ஒன்றைக் கொள்ளையிட்டுக் கொண்டிருந்த குழுவொன்றுடன் பொலிசார் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் மூன்று பொலிசார் மற்றும் இரு பொது மக்கள் காயமுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, கொள்ளையர்கள் காயங்களுடன் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில் வாழும் நபர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் கொள்ளையர்களைப் பிடிக்க முற்பட்ட போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment