கோத்தாவின் வழக்கிலிருந்து நீதிபதிகள் விலகல்! - sonakar.com

Post Top Ad

Friday, 1 June 2018

கோத்தாவின் வழக்கிலிருந்து நீதிபதிகள் விலகல்!


மிக் விமானக் கொள்வனவு ஊழல் மற்றும் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரங்கள் தொடர்பில் தனது கைதைத் தவிர்க்கக் கோரி கோத்தபாய தாக்கல் செய்த அடிப்படை உரிமை வழக்கிலிருந்து மேலும் இரு நீதிபதிகள் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.


இதனடிப்படையில் இதுவரை நான்கு நீதிபதிகள் குறித்த வழக்கிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக் கொள்வதாக தெரிவித்து விலகியுள்ளனர்.

எனினும், இம்மனுவின் அடிப்படையில் கோத்தபாய ராஜபக்சவினை கைது செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை வழக்கின் விசாரணை நவம்பர் 27 வரை பின் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment