பாக் - இலங்கை கூட்டு இராணுவ பயிற்சி பற்றி கலந்துரையாடல் - sonakar.com

Post Top Ad

Saturday 30 June 2018

பாக் - இலங்கை கூட்டு இராணுவ பயிற்சி பற்றி கலந்துரையாடல்


இலங்கை - பாகிஸ்தான் கூட்டு இராணுவ பயிற்சி பற்றி பாக் - இலங்கை இராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று நிகழ்ந்துள்ளது.


2009 இறுதி யுத்தத்தின் போது இலங்கை விமானப் படைக்கு பாக். இராணுவத்தினரின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்ததோடு யுத்த நிறைவுக்கு பாரிய பங்களிப்பும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான இராணுவ கூட்டுறவைத் தொடர்வதோடு கூட்டு பயிற்சி செயற்திட்டங்கள் குறித்தும் பாக். இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சுபைர் மஹ்மூத் மற்றும் அட்மிரல் ரவீந்ர விஜயகுணரத்ன ஆகியோரிடையே பேச்சுவர்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Mahibal M. Fassy said...

சிறுபான்மையினருக்கு எதிரான -  விசேடமாக அதி சிறு பான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தலைப் பட்சமான வன் செயல்களின்போது, எவ்வாறு அவர்களையும் அவர்களது பொருளாதாரத்தையும்  இனவாதிகளிடம் இருந்து காப்பது என்பதையும் பயிற்சியில் ஓர் முக்கிய அம்சமாக இணைத்துக் கொள்வது பயிற்சியை அர்த்தமுள்ளதாக்கும். 

அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவர்களது படைகளைக் கொண்டும் அமைதியை நிலைநாட்டப் பயன்படுத்துவதனை ஓர் சரத்தாக இணைத்துக் கொள்ளலாம்.

ஓர் உலகளாவிய இஸ்லாமிய சாம்ராஜ்யம் இல்லாத இக்காலங்களில், சகோதர முஸ்லிம் நாடுகள் அளிக்கும் பல்வேறு உதவிகளை முஸ்லிம்கள் மேலுள்ள அக்கறையையும் உதவிக்கான ஓர் நிபந்தனையாக ஆக்கிக்கொள்வதே ஏற்புடையதாகும்.

சம்பந்தப்பட்டவர்கள் இவற்றை அவர்களது கவனத்திற்கு கொண்டு வருவார்களாக.

Post a Comment