அனைத்து நாடுகளுக்குமான புதிய கடவுச்சீட்டுகள் பெறுவதில் சிக்கல்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 June 2018

அனைத்து நாடுகளுக்குமான புதிய கடவுச்சீட்டுகள் பெறுவதில் சிக்கல்!


அனைத்து நாடுகளுக்கும் செல்லக்கூடிய வகையிலான கடவுச்சீட்டுக்கள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் அவற்றை விநியோகிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கிறது குடிவரவு குடியகல்வு திணைக்களம்.


மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டுகள் 250,000 கையிருப்பு இருக்கின்ற அதேவேளை அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுகள் 2015ம் ஆண்டின் பின் அச்சிடப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் இது குறித்து சுட்டிக்காட்டப்பட்டு வந்த போதிலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கையெடுக்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment