
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனப் பிரேரணையைத் தடுத்து தனிமைப்பட்டுப் போன அமெரிக்கா ஐ.நா பொதுச் சபையில் மீண்டும் தலைகுனிவை சந்தித்துள்ளது.
குவைத்தினால் கொண்டு வரப்பட்ட இஸ்ரேலிய அட்டூழியங்களுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்துக்கு 120 நாடுகள் ஆதரவளித்து நேற்றைய தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் ஹமாஸ் இயக்கத்தைச் சாடும் வகையிலான பதில் பிரேரணையை முன் வைத்து அமெரிக்கா அவமானப்பட்டுள்ளது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட சபையில் 120 நாடுகள் இஸ்ரேலைக் கண்டிக்கும் பிரேரணையை ஆதரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment