வரி அதிகரிப்பின் பின் தங்கக் கடத்தல் அதிகரிப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 3 June 2018

வரி அதிகரிப்பின் பின் தங்கக் கடத்தல் அதிகரிப்பு!


அண்மைய வரி அதிகரிப்பின் பின் தங்கக் கடத்தல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சுங்கத் திணைக்களம்.


ஜனவரி - ஏப்ரல் வரையான காலப்பகுதியில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக 40 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ள அதேவேளை யாழ் குடா பகுதியூடாக 50 கிலோ வரை கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வரி விலக்கின் போது நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தங்கத்தின் அளவு ஏற்றுமதி செய்யப்பட்ட தங்கத்தை விட குறைவென்பதால் வரி விலக்கு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகக் கூறி அரசாங்கம் வரி அதிகரிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment