இனி எங்கள் எழுச்சியைத் தடுக்க முடியாது: சந்திம! - sonakar.com

Post Top Ad

Sunday, 3 June 2018

இனி எங்கள் எழுச்சியைத் தடுக்க முடியாது: சந்திம!ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல கூறுகளாக பிளவுற்றிருப்பது போன்ற தோற்றம் நிலவி வந்த நிலையில் தற்போது தற்காலிக நிர்வாகத்தின் கீழ் முழு மனதுடன் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாக தெரிவிக்கின்ற சு.க நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, அடுத்த தேர்தலில் சு.க ஜனாதிபதி வெல்வது உறுதியெனவும் இனி தமது கட்சியின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது எனவும் தெரிவிக்கிறார்.


அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலம் பொருந்திய சக்தியாக உருவெடுக்கும் எனவும் தற்போது கட்சிக்குள் நிலவி வந்த முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குரூப் 16 உறுப்பினர்களும் புதிய நிர்வாகத்துடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment