சனத் நிசாந்தவுக்கு எதிராக பிடியாணை! - sonakar.com

Post Top Ad

Thursday, 7 June 2018

சனத் நிசாந்தவுக்கு எதிராக பிடியாணை!


வழக்கொன்றுக்கு சமூகமளிக்கத்தவறிய புத்தளம் மாவட்ட கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவைக் கைது செய்து நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது சிலாபம் நீதிமன்றம்.ஆரச்சிகட்டுவ பிரதேச செயலாளரை அச்சுறுத்திய விவகாரத்தின் பின்னணியில் 2008ம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதேவேளை நேற்றைய தினமும் பிறிதொழு வழக்குக்காக குறித்த நபரும் அவரது சகோதரரும் நீதிமன்றில் சமூகமளித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று வழக்குக்கு சமூகமளிக்காததன் பின்னணியில் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment