புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்: மைத்ரி கவலை! - sonakar.com

Post Top Ad

Thursday, 7 June 2018

புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்: மைத்ரி கவலை!


மருத்துவம், பொறியியல், தொழிநுட்பம் உட்பட பல்வேறு துறை சார் நிபுணர்கள், புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளை நாடிச் செல்வது பாரிய சிக்கலை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.ஆட்சி மாற்றத்தின் பின்னர் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை தைரியமாக நாடு திரும்புமாறும், நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்குமாறும் அறைகூவல் விடுத்த மைத்ரி, மூன்று வருட ஆட்சியின் பின்னர் இருக்கும் புத்திஜீவிகளும் வெளியேறிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றார்.

பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமங்கள் வழங்கும் நிகழ்வு இன்று தாமரைத் தடாகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளமையும் நாடு பொருளாதார ரீதியாக பலவீனமுற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment: