அலோசியசின் நிறுவனத்திடமிருந்து சுஜீவவுக்கு 3 மில்லியன்! - sonakar.com

Post Top Ad

Thursday, 7 June 2018

அலோசியசின் நிறுவனத்திடமிருந்து சுஜீவவுக்கு 3 மில்லியன்!


அலோசியசின் மதுபான நிறுவனமான மென்டிசிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக 3 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் சுஜீவவின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளே தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று காசோலைகளை வங்கிகளில் மாற்றியிருப்பதாகவும் பிணை முறி மோசடி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவ்வாறு தமக்கு பணம் வந்தது தெரியாது எனவும் தமது தேர்தல் பிரச்சாரத்துக்கான நன்கொடைகளை வேறு ஒருவேரை கையாண்டதாகவம் சுஜீவ மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment