பல்கலை விவகாரத்தில் நான் உண்மையைத் தான் சொன்னேன்: விஜேதாச! - sonakar.com

Post Top Ad

Thursday, 21 June 2018

பல்கலை விவகாரத்தில் நான் உண்மையைத் தான் சொன்னேன்: விஜேதாச!


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக தான் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தில் மாற்றமில்லையென தெரிவித்துள்ளார் உயர்கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச.மாணவியொருவர் எழுத்து மூலம் அதற்கான முறைப்பாட்டைத் தந்துள்ளதாகவும் விஜேதாச மேலும் தெரிவித்துள்ளார். 

வி.சீ. இஸ்மாயிலின் நியமனத்தையடுத்து விஜேதாச வெளியிட்ட இக்கருத்தினால் ஏனைய மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் ஹரீஸ் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்தே விஜேதாச இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment