மஹிந்தவின் தயவின்றி மைத்ரிக்கு எதிர்காலமில்லை: டிலான் - sonakar.com

Post Top Ad

Thursday, 7 June 2018

மஹிந்தவின் தயவின்றி மைத்ரிக்கு எதிர்காலமில்லை: டிலான்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமானால் மைத்ரிபால சிறிசேனவுக்கு மஹிந்த ராஜபக்சவின் தயவும், ஆதரவும் அவசியம் என தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.நம்பிக்கையில்லா பிரேரணையில் ரணிலுக்கு எதிராக வாக்களித்ததன் பின்னணியில் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்துள்ள டிலான், ராஜபக்ச சகோதரர்களுக்கு மாற்றீடாக மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுமதிக்க வேண்டுமானால் அதற்கு மஹிந்தவின் ஆதரவும் அங்கீகாரமும் அவசியம் என தெரிவித்துள்ளார்.

மைத்ரி ஆதரவாளர்கள் குழு தொடர்ந்தும் அவரே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்பட வேண்டும் என தெரிவித்து வருகின்ற நிலையில் மைத்ரி - மஹிந்த அணியினர் இணைவது குறித்தும் பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment