ஒலுவில்: புகையிலைப் பொருட்கள் விற்பனையை நிறுத்த முடிவு - sonakar.com

Post Top Ad

Friday, 29 June 2018

ஒலுவில்: புகையிலைப் பொருட்கள் விற்பனையை நிறுத்த முடிவு

ஒலுவில் பிரதேசத்தின் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் ‘புகைத்தல் இல்லாத ஒலுவில்’  என்ற தொனிப்பொருளில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு வர்த்தக சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
ஒலுவில் பிரதேச வர்த்தகர்கள் இன்றிலிருந்து புகைத்தல் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதில்லை என்று ஏகமானதாக முடிவு எடுக்கப்பட்டு அதனை அமுல்படுத்தவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.


புகைத்தல் மூலமாக ஏற்படுகின்ற கொடிய உடல்ரீதியான பிரச்சினைகள், மரணம், பொருளாதார பிரச்சினை போன்றவை சமூகத்தின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்றது. எனவே இப்படியான கொடிய பிரச்சினைகளில் இருந்து எம் சமூகத்தை பாதுகாக்கவும் எதிர்காலத்தில் புகைத்தல் அற்ற ஒலுவில் பிரதேசத்தை உருவாக்கவும் இந்த நல்ல விடயத்தை தாம் மேற்கொள்வதாக ஒலுவில் வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.
இந்த நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் AL. அமானுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் TJ. அதிசயராஜ், அக்கரைப்பற்று போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிஹஸீப், சுகாதார வைத்திய அதிகாரி Dr.AL. அலாவுதீன், சமுர்த்தி உத்தியோகாத்தார்கள், ஒலுவில் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் எதிர்வரும் ஞாயிறு காலை புகைத்தலை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் மாபெரும் பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சாஜஹான் றினோஸ்


No comments:

Post a Comment