ரணிலை மக்கள் நிராகரிப்பார்கள்: திஸ்ஸ நம்பிக்கை! - sonakar.com

Post Top Ad

Sunday, 10 June 2018

ரணிலை மக்கள் நிராகரிப்பார்கள்: திஸ்ஸ நம்பிக்கை!


2020 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால் மக்களால் நிராகரிக்கப்படுவார் என உறுதியாகத் தெரிவிக்கிறார் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க.அடுத்த தேர்தலில் நாட்டைப் பற்றி தெளிவான சிந்தனையுள்ள ஒரு தலைவரை ஆதரிப்பதையே தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்காது என தெரிவிக்கிறார்.

நீண்ட கால ஐக்கிய தேசியக்கட்சி செயலாளராக இருந்த திஸ்ஸ, கடந்த ஜனாதிபதி தேர்தலின் இறுதிக் கட்டத்தில் திடீரென கட்சி மாறி 20 நாட்கள் அமைச்சுப் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment