பலஸ்தீனர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு: வீட்டோ செய்யத் தயாராகும் அமெரிக்கா! - sonakar.com

Post Top Ad

Friday, 1 June 2018

பலஸ்தீனர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு: வீட்டோ செய்யத் தயாராகும் அமெரிக்கா!


காஸா உட்பட அனைத்து ஆக்கிரமிப்பு பகுதிகளிலும் வாழும் பலஸ்தீன மக்களுக்கு சர்வதேச பாதுகாப்பைக் கோரி குவைத்தினால் ஐ.நா பாதுகாப்பு சபையில் முன் வைக்கப்படவுள்ள பிரேரணையை அமெரிக்கா வீட்டோ செய்யும் என அந்நாடு தெரிவித்துள்ளது.குறித்த பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கின்ற அமெரிக்கா, குவைத் இஸ்ரேலியர்களை மாத்திரமே குற்றங் காண்பதாகவும் தெரிவித்துள்ளதுடன் பலஸ்தீனர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான மாற்று பிரேரணையொன்றையும் முன் வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து பிரேரணைகளையும் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தின் மூலம் செல்லாக்காசாக மாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment