யாழ் சிறுமி கொலை: சந்தேக நபர் கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 June 2018

யாழ் சிறுமி கொலை: சந்தேக நபர் கைது!


யாழ், சுழிபுரம் - காட்டுப்புலம் சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலையான சம்பவத்தின் பின்னணியில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


திங்களன்று சுழிபுரம் கிணறொன்றிலிருந்து மீட்கப்பட்ட ஆறு வயது சிறுமியின் சடலம் மருத்துவ பரிசோதனைகளின் பின் நேற்று (26) மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

பிரதேச மக்கள் காட்டுப்புலம் அ.த.க பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் வெண்கரம் ஆசிரியர்கள் செயற்பாட்டாளர்கள் காட்டுப்புலம் - பாண்டவெட்டை சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சட்டத்தரணி கே.சுகாஸ் மற்றும் நூற்றுக்கணக்கானோர் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் 22 வயது நபர் ஒருவர் இப்பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment