சம்பந்தனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் மஹிந்த - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 June 2018

சம்பந்தனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் மஹிந்த


2020 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறார் மஹிந்த ராஜபக்ச.அடுத்த தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளையும் வென்றெடுக்க வியூகமிட்டு வரும் மஹிந்த, பெரும்பாலும் தனது சகோதரர்களுள் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்நிறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்சவே தற்சமயம் 'தேர்வாக' இருக்கும் அதேவேளை அவருக்கு தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு மஹிந்த முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment