100 நாள் திட்டத்தில் 'எல்லோருக்கும்' பங்குள்ளது: ஹரின் - sonakar.com

Post Top Ad

Monday, 4 June 2018

100 நாள் திட்டத்தில் 'எல்லோருக்கும்' பங்குள்ளது: ஹரின்


மைத்ரிபால சிறிசேனவின் வெற்றியின் பின்னர் உருவாக்கப்பட்ட 100 நாள் திட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, மைத்ரியின் வெற்றிக்காக பாடுபட்ட சிவில் அமைப்புகள் முதல் பலருக்கு பங்கிருக்கிறது என தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஊடகப் பேச்சாளர் ஹரின் பெர்னான்டோ.


எனினும், குறித்த திட்டம் முட்டாள்தனமானது எனவும் அதனை யாரு உருவாக்கினாரோ தெரியவில்லையெனவும் மைத்ரி அண்மையில் விசனம் வெளியிட்டிருந்தார்.

எனினும், 100 நாள் திட்டத்தின் மூலம் பல விடயங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் ஆனாலும் உள்ளடக்கப்பட்டிருந்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியாமல் போனதாகவும் ஹரின் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment