புலியைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை: கிரியல்ல - sonakar.com

Post Top Ad

Friday, 22 June 2018

புலியைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை: கிரியல்லகிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் 10 பேரைத் தாக்கிய புலியொன்றை அடித்துக் கொன்ற நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் கிரியல்ல.

வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேர் தாக்குதலுக்குள்ளாகியிருந்த நிலையில் புலியை பொது மக்கள் அடித்துக் கொன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.


இந்நிலையில், குறித்த நபர்களை அடையாளம் கண்டு உயர்ந்த பட்ச தண்டனை வழங்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment