பிணை கிடைத்தால் 'கண்டிக்கு' போகத் திட்டம்: ஞானசார - sonakar.com

Post Top Ad

Friday, 22 June 2018

பிணை கிடைத்தால் 'கண்டிக்கு' போகத் திட்டம்: ஞானசார


தமது பிணை மனு அங்கீகரிக்கப்பட்டு இன்றைய தினம் பிணை கிடைத்தால் உடனடியாக கண்டி செல்லவுள்ளதாக தெரிவிக்கிறார் ஞானசார.


அங்கு சென்று மகாநாயக்கர்களை சந்தித்து, பௌத்த துறவிகள் விவகாரங்களை விசாரிப்பதற்கான தனியான நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் தாம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவ நீதிமன்றம் போன்று, பௌத்த துறவிகள் விவகாரங்களை விசாரிக்கவென தனியான நீதிமன்றம் அவசியம் என ஞானசாரவின் கைதின் பின்னர் குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment