ஶ்ரீலங்கன், மிஹின் லங்கா ஊழல் விசாரணை ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Monday, 4 June 2018

ஶ்ரீலங்கன், மிஹின் லங்கா ஊழல் விசாரணை ஆரம்பம்


ஸ்ரீலங்கன், மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படும் ஊழல் தொடர்பிலான விசாரணைகளை ஜனாதிபதி ஆணைக்குழு இன்று ஆரம்பித்துள்ளது.


மத்திய வங்கி பிணை முறி மோசடி விசாரணையின் பின், இவ்விவகாரத்தைக் கையிலெடுக்கப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதற்கான குழுவும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2006 ஜனவரி முதல் 2018 ஜனவரி 31ம் திகதி வரையிலான முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் 2019 டிசம்பரில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment