அக்கரைப்பற்று: பள்ளிவாசல்கள் சம்மேளனம் - கோவில் நிர்வாகம் பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Monday, 18 June 2018

அக்கரைப்பற்று: பள்ளிவாசல்கள் சம்மேளனம் - கோவில் நிர்வாகம் பேச்சுவார்த்தை


அக்கரைப்பற்றில் தனியார் காணியொன்றில் வேலியிடச் சென்ற முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பிரதேசத்தில் நிலவிய பதற்றத்தின் பின்னணியில் பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் கோவில் நிர்வாகமிடையே  பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.தாக்குதலை நடாத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என முஸ்லிம்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள அதேவேளை, அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் அருகில் ஊர் மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

சம்பவத்தின் போது பொலிசார் ஆஜராகியிருந்த போதிலும் தாக்குதல் நடாத்தியவர்கள் கைது செய்யப்படாத அதேவேளை, தமிழ் பிரதேச அரசியல்வாதியொருவரின் தலையீடிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment