மங்களவுக்கு ஐ.தே.கட்சியில் பிரதித் தலைவர் பதவி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 June 2018

மங்களவுக்கு ஐ.தே.கட்சியில் பிரதித் தலைவர் பதவி!


ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்களுள் ஒருவராக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார் மங்கள சமரவீர.


அண்மைய கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் இந்நியமனமும் வழங்கப்பட்டுள்ள அதேவேளை ஏலவே பின்வரிசை உறுப்பினர்கள் புதிய மாற்றங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

எனினும், 30 வருடங்களுக்கு முன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த போது பிறிதொரு நாள் ஐக்கிய தேசியக் கட்சியில் இவ்வாறு ஒரு உயர் பதவி கிடைக்கும் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லையென மங்கள தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment