ஊடகத் துறையினருக்கு ACJUவின் இப்தார் நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 June 2018

ஊடகத் துறையினருக்கு ACJUவின் இப்தார் நிகழ்வு


அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு முதன் முறையாக விஷேட இப்தார் நிகழ்வு ஒன்றை நேற்று கொள்ளுப்பிட்டியில் உள்ள அதனியார் உணவகம் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தது.

உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் றிஸ்வி முப்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அச்சு, இலத்திரணியல் மற்றும் சமுக வலைத்தள ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


இந்நிகழ்வில் உலமா சபையின் தலைவர் தற்கால யுகத்தில் முஸ்லிம் சமுகத்தின் ஊடகக் குறைபாட்டையும் அதன் தேவையையும் சுட்டிக்காட்டி முஸ்லிம் சமுகத்தின் பிரச்சினைகள் மற்றும் நல்ல விடயங்கள் சமுகத்தின் மத்தியில் உரிய முறையில் கொண்டு செல்லப்படாமைக்கு முஸ்லிம்களுக்கான ஊடக குறைபாடே காரணம் என்றும் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் நல்ல திட்டங்கள் மற்றும் சமுக நலச் செயற்பாடுகளைக்கூட மக்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமைகள் இந்த ஊடக குறைபாட்டால் காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்டார். அத்துடன் மக்களின் நலன்களுக்கும் அவர்களின் குறை நிறைகளை வெளிப்படுத்துவதற்கு ஊடகம் இன்றியமையாதுள்ளதாகவும், ஒரு அரசாங்கத்தைக்கூட மாற்றியமைக்கும் சக்தி இந்த ஊடகத்துறைக்கு உள்ளது எனச் சுட்டிக்காட்டிய அவர் இந்தத்துறையில் நடுநிலையாக செயற்படும் ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் அல்லாஹ் அருள் புரிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது முஸ்லிம் சமுகத்தின் ஊடகக் குறைபாடுகள், அதனை கட்டியெழுப்பட வேண்டியதன் அவசியத்தையும், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் எதிர் கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாகவும், முஸ்லிம் ஊடகவியலாளர்களை ஊக்குவிப்பதற்கும், அவர்களின் ஊடக ஆற்றல்களை மேம்படுத்த அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையும் உதவ முன்வரவேண்டும் எனவும் நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் கருத்து தெரிவித்தார்.

இந்கழ்வுகளை மௌலவி நௌபர் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a comment