4 மணி நேரத்துக்கு முன்பாகவே வரவும்: ஸ்ரீலங்கன் அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 17 June 2018

4 மணி நேரத்துக்கு முன்பாகவே வரவும்: ஸ்ரீலங்கன் அறிவிப்புகட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெறும் திருத்தப் பணிகள் இடம்பெறும் நிலையில் பயணிகளை நான்கு மணி நேரத்துக்கு முன்பாகவே விமான நிலையம் வரும்படி அறிவிக்கிறது ஸ்ரீலங்கன்.


விமான நிலைய பாதுகாப்பு மற்றும் ஏனைய செயற்பாடுகளில் ஏற்படும் தாமதம் மற்றும் அதன் பின்னணியில்லான அசௌகரியங்களை தவிர்க்குமுகமாகவே பயணிகளுக்கு இவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமான சேவைகள் பொதுவாக மூன்று மணி நேரத்துக்கு முன்பாக விமான நிலையம் வருமாறு பயணிகளை அறிவுறுத்தும் வழமையைப் பின்பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment