ஞானசாரவின் பிணை மனு 22ம் திகதிக்கு தள்ளி வைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 June 2018

ஞானசாரவின் பிணை மனு 22ம் திகதிக்கு தள்ளி வைப்பு


ஆறு மாத கடூழிய சிறைத் தண்டனையுடன் வெலிக்கடை சிறைச்சாலை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார சார்பில் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணையை 22ம் திகதிக்குப் பின் போட்டுள்ளது நீதிமன்றம்.


சட்டமா அதிபர் அலுவலக அதிகாரிகள் நீதிமன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இவ்வாறு பின் போடப்பட்டுள்ளது.

நீதிமன்றுக்குள் புகுந்து சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தி அடாவடித்தனம் புரிந்ததன் பின்னணியில் ஞானசாரவுக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ள அதேவேளை வீரகேசரி பத்திரிகை அது முஸ்லிம்களுக்குக் கிடைத்த பெருநாள் பரிசென தலைப்பிட்டு இனக்குரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment