அலோசியசிடம் பணம் பெற்ற 118 பேர் யார்? கரு ஜயசூரிய கடிதம்! - sonakar.com

Post Top Ad

Friday, 1 June 2018

அலோசியசிடம் பணம் பெற்ற 118 பேர் யார்? கரு ஜயசூரிய கடிதம்!


அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்ற 118 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலைத் தரும்படி ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.


குறித்த நபர்களின் பெயர்கள் வெளியிடப்படாவிட்டால் அது அனைவரையும் பாதிக்கும் என பணம் பெற்றுக்கொள்ளாதவர்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் கரு ஜயசூரிய உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

தயாசிறி 1 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சரத் பொன்சேகா 1 லட்சம் கிடைத்ததாகவும் அது தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட நன்கொடை எனவும் விளக்கமளித்திருந்ததுடன் தேவைப்பட்டால் வட்டியுடன் திருப்பிக் கொடுக்கவும் தயார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment