முன்னுக்குப் பின் முரணாகப் பேசி அதிருப்தியை சம்பாதிக்கும் மைத்ரி! [video] - sonakar.com

Post Top Ad

Thursday, 31 May 2018

முன்னுக்குப் பின் முரணாகப் பேசி அதிருப்தியை சம்பாதிக்கும் மைத்ரி! [video]


பொது வேட்பாளர், நாட்டை ஊழலிருந்து மீட்டெடுக்கக் கூடியவர் எனும் நம்பிக்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரிபால சிறிசேன தற்போது தனது கூட்டாட்சிக்குள் நிலவும் குழப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இதில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களையும் அவர் வெளியிட்டு வருவதனால் சமூக வலைத்தள பாவனையாளர்கள் பெருமளவில் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றை தினம் சோபித தேரரின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட மைத்ரி, மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியுற்ற பின் அரசாங்க வானூர்தியில் சென்றதாகவும் அது தனக்கே தெரியாமல் தனது பெயரில் விமானப் படையினருக்கு உத்தரவு வழங்கப்பட்டதன் பின்னணியில் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளதுடன் அரசுக்குள் பல விடயங்கள் இவ்வாறே நடப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும், 2016ம் ஆண்டு மொனராகலயில் வைத்து தானே ஹெலிகப்டரில் மஹிந்த ராஜபக்சவை அனுப்பி வைத்ததாக தெரிவித்த கருத்தடங்கிய காணொளியைக் கீழ்க் காணலாம்.

No comments:

Post a Comment