அலோசியஸ் தந்த பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுப்பேன்: பொன்சேகா - sonakar.com

Post Top Ad

Thursday, 31 May 2018

அலோசியஸ் தந்த பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுப்பேன்: பொன்சேகா


தனது தேர்தல் செலவுக்காக அர்ஜுன் அலோசியஸ் தந்த ஒரு லட்ச ரூபா பணத்தைத் தான் வட்டியோடு திருப்பிக் கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் சரத் பொன்சேகா.மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தின் முக்கிய புள்ளியான அர்ஜுன் அலோசியசிடமிருந்து 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஞ்சன் ராமநாயக்க தானும் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்கவும் அவ்வாறு பணம் வாங்கவில்லையென தெரிவித்துள்ள நிலையில் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும் தனக்குத் தரப்பட்டது லஞ்சமில்லையென சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment