டென்மார்க்கிலும் பொது இடங்களில் புர்கா, நிகாபுக்குத் தடை! - sonakar.com

Post Top Ad

Thursday, 31 May 2018

டென்மார்க்கிலும் பொது இடங்களில் புர்கா, நிகாபுக்குத் தடை!


பொது இடங்களில் புர்கா, நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான சட்டம் டென்மார்க்கிலும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.முகத்தை முழுமையாக மூடும் வகையிலான அல்லது கண்கள் மாத்திரம் தெரியும் வகையிலான ஆடைகளை பொது இடங்களில் அணிபவர்களுக்கு 1000 க்ரோனர் அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக விதியை மீறினால் 10,000 க்ரோனர் வரை அபராதம் விதிக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குறித்த சட்டத்தினை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டதையடுத்து டென்மார்க் நாடாளுமன்றில் 75:30 எனும் வாக்கு வித்தியாசத்தில் இச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment