ரணல: முஸ்லிம்கள் இருவரின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரை (video) - sonakar.com

Post Top Ad

Sunday, 20 May 2018

ரணல: முஸ்லிம்கள் இருவரின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரை (video)கடுவெல, ரணல பகுதியில் இயங்கி வந்த முஸ்லிம் நபர்களுக்குச் சொந்தமான இரு வர்த்தக நிலையங்கள் நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளன.

சம்பவத்தின் பின்னணி தொடர்பில் இதுவரையிலும் கண்டறியப்படாத நிலையில் முஹம்மத் மற்றும் பாசில் ஆகியோருக்கு சொந்தமான இரு வர்த்தக நிலையங்களே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அண்மையில் திஹாரிய எல்லையிலும் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாகியிருந்த போதிலும் நாளடைவில் அது இனவாத செயலில்லையென்பது கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விரு வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளமையும் பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment