சவுதி: 1000 எத்தியோப்பியர்கள் சிறையிலிருந்து விடுதலை - sonakar.com

Post Top Ad

Sunday, 20 May 2018

சவுதி: 1000 எத்தியோப்பியர்கள் சிறையிலிருந்து விடுதலைசவுதி அரேபியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறைப்படுத்தப்பட்டிருந்த 1000 எத்தியோப்பியர்களை ஒரே நேரத்தில் விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

100 பெண்கள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையிலடைக்கப்பட்டிருந்தோர் எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதின் சவுதி விஜயத்தின் போதான கோரிக்கையின் அடிப்படையில் விடுவிக்கப்படுவதாக சவுதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை சவுதியில் 5 லட்சம் எத்தியோப்பியர்கள் சட்டவிரோதமாக குடியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment