இன்ஷா அல்லாஹ், உதவ முடிந்தால் அவசியம் உதவுங்கள்! - sonakar.com

Post Top Ad

Sunday, 20 May 2018

இன்ஷா அல்லாஹ், உதவ முடிந்தால் அவசியம் உதவுங்கள்!


கொழும்பு, மாளிகாவத்தையில் கடும் சிரமத்துக்கு மத்தியில் சிறப்பாக இயங்கி வரும் ஹம்தானியா அரபிக் கல்லூரி (மத்ரசா) மாணவர்களின் இப்தார் மற்றும் சஹர் உணவுத் தேவைகளை நிறைவேற்ற நிதியுதவி எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஷா அல்லாஹ், உதவ மனம் படைத்தவர்கள் நேரடியாக மத்ரசாவின் வங்கிக் கணக்குக்கு உங்கள் பங்களிப்பினை அனுப்பி வைக்கலாம்.

45 மாணவர்கள், 06 உலமாக்கள் மற்றும் ஒரு ஊழியருடன் இயங்கி வரும் குறித்த மத்ரசாவுக்கு சோனகர்.கொம் பிரதிநிதி நேரடியாக விஜயம் செய்ததோடு குறித்த பிரதேசத்தில் சிறுவர்கள் மத்தியில் இவ்வாறான அடிப்படை மாற்றத்தின் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்நிலையில், இப்தார் அல்லது சஹர் வேளைக்கான உணவுக்கான செலவு தலா 4000 ரூபா எனவும் ஒரு நாளின் இரு வேளை உணவுக்குமான செலவு 8000 ரூபா எனவும் மத்ரசா நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

ஒரு வேளை அல்லது இரு வேளைகளுக்குமான பங்களிப்பை வழங்க விரும்புவோர் கீழ்க்காணும் வங்கிக் கணக்குக்கு தமது உதவிகளை நேரடியாக அனுப்பி வைக்கலாம்.

A/C Name: Hamdhaniyya Arabic College
A/C Number: 8380023280
Bank: Commercial Bank

நிர்வாக தொடர்புகளுக்கு: 0723334113 / 0771028734

No comments:

Post a Comment