UK: முஸ்லிம் சமூக அமைப்புகளின் கூட்டறிக்கை! - sonakar.com

Post Top Ad

Monday 7 May 2018

UK: முஸ்லிம் சமூக அமைப்புகளின் கூட்டறிக்கை!


கடந்த 2012ம் ஆண்டு முதல் இலங்கையில் நிலவி வரும் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கும் முகமாக ஐக்கிய இராச்சியத்தில் பல்வேறு இலங்கை முஸ்லிம் அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இவற்றுள், கள நடவடிக்கைகளில் முன்னிலை வகிக்கும், வெ வ்வேறு தளங்களில் இதுவரை பயணித்து வந்த இரு பிரதான அமைப்புகள் கடந்த 5ம் திகதி சனிக்கிழமை லெஸ்டர் நகரில் நேரடியாக சந்தித்து தமக்கிடையிலான புரிந்துணர்வை வளர்த்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை நடாத்தியிருந்தன.


இதன் பின்னணியில் இரு தரப்பும் இணைந்து இன்று கூட்டறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.

தமது அறிக்கையில் : 

இரு தரப்பும் எதிர்காலத்தில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடனும் புரிந்துணர்வுடனும் இயங்குவதோடு அவ்வப்போது நேரடியாக சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கும் இணக்கம் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லெஸ்டர் நகரில், சமூக ஆர்வலர் யூனுஸ் ஒஸ்மான் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இரு அமைப்புகளின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உட்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்ததோடு அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள சமூக ஆர்வலர்கள் நடுநிலையான பார்வையாளர்களாகவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment